2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட மாநாடு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
 
சம்மாந்துறை நகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட மாநாடு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (16)  இடம்பெற்றது.
 
மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் சம்மாந்துறை நகரை அழகுபடுத்துவது தொடர்பாக அனைத்து திணைக்களத் தலைவர்களுடனும் கலந்துரையாடி தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.
 
சம்மாந்துறைப் பிரதேசத்தின் வாய்க்கால், வடிகான்களைத் திட்டமிட்டு அமைத்தல், பாதை வளைவுகளைப் பொருத்தமாகத் திட்டமிடல், பாதைகளைச் சீராகச் செப்பனிடல், மின்சாரப் பிரச்சினைகளைச் சீர் செய்தல், குடிநீர் வசதிகளைத் தாராளமாக ஏற்படுத்தல், போக்குவரத்து வசதிகளை விஷ்தரித்தல், இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் டிப்போ அமைத்தல் மற்றும் ஜனாதிபதி விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் சம்மாந்துறை நகரை எழில் கொஞ்சும் நகராக மாற்றியமைப்பதறற்கான திட்டங்கள் இதன்போது வகுக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் எம்.எல்.எம்.என்.முபீன், நகர அபிவிருத்தி அதிகார சபை மேலதிகப் பணிப்பாளர் நாயகம் பிறிகேடியர், சமந்த ஜெயசுந்தர, திட்ட முகாமைத்துவப் பணிப்பாளர் மஹிந்த விதானாராட்சி, பிரதிப் பணிப்பாளர் எச்.டபிள்யூ.சோமரத்ன, காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன பிரதிப் பொது முகாமையாளர் எஸ்.அமரசிங்க, பிரதம பணிப்பாளர் எல்.றோய் பினாண்டோ, கிழக்கு மாகாண நீர்பாசன திணைக்கள பிரதம பொறியியலாளர்களான எம்.ஜஃபர், எஸ்.சிவபாத சுந்தரம், கிழக்கு மாகாண போக்குவரத்துச் சபை பொது முகாமையாளர் எம்.எம்.சித்தீக், ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.பி. ஹஸன் அலி உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X