Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி அப்பிரதேச பொது மக்கள், வைத்தியசாலைக்கு முன்பாக இன்று சனிக்கிழமை (18) ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
பௌதிக வளங்கள் மற்றும் ஆளணி வளங்களை நிவர்த்தி செய்து, பொத்துவில் பிரதேசத்தில் காணப்படும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்குமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திசெய், சுகாதார உதவியாளர்களை உடன் நியமி,நிரந்தர விபியை நியமி,ஈ.சி.ஜீ யை நியமி வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய் மற்றும் மகப் பேற்று வைத்திய நிபுணரின் இடமாற்றத்தை உடனடியாக நிவர்த்தி செய் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில், 2007ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்ட இவ் வைத்தியசாலை தேவையான வசதிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் இயங்கி வருகின்றது.
மேலும் இவ்வைத்தியசாலைக்கு விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
மயக்க மருந்து வழங்கும் விசேட வைத்திய நிபுணர் இல்லாமை அத்துடன் சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு தேவையான வைத்திய உபகரணங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போது பணி புரியும் மகப்பேற்று வைத்தியரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரியும் கிழக்கு மாகாண சபையால் முடியாமல் விட்டால் பொத்துவில் ஆதார வைத்தியசாலையை பெயருக்காக வைத்திருக்காமல் மத்திய அரசிடம் கையளிக்குமாறும் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ் வினைத்திறன் அற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பங்கு பற்றாத தற்போதய அபிவிருத்தி குழுவை கலைத்து புதிய குழுவை அமைக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொத்தவில் ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார இராஜங்க அமைச்சர் ஹஸன் அலி, இவ் வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்திருந்தும் இதுவரையில் அவ் வாக்குறிதி நிறைவேற்றப்படவில்லை.
எனினும், கல்முனையில் இரண்டு ஆதார வைத்தியசாலைகள் இருக்கின்ற நிலையில், அதற்கு அண்மையில் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் nதிவித்துள்ளனர்.
பொத்துவில் பௌத்த விகாராதிபதியும் கலந்து கொண்டிருந்துடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீனிடம் சுகாதார அமைச்சரிடம் வழக்குமாறு தெரிவித்து வைத்தியசாலையின் தேவைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago