Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சருமாதன ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுக்களின் பின்னனியில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபைர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கெதிராக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவரும் தகவல்கள் தொடர்பாக திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியையும் அதன் அதிகமான மக்கள் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் வங்குரோத்துக்காரர்களின் செயற்பாடாகவே இது காணப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது. அந்தளவுக்கு எமது கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான வளர்ச்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு பாரிய சவாலாக மாறியுள்ளது. அதற்காகவே எமது கட்சியை தோற்கடிப்பதற்கு முன்னேற்பாடாக கட்சியின் தலைமைக்கு எதிராக போலியான பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி இணையதளங்கள், முக நூல்களிலும் விசமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே செயற்பட்டுவருகின்றது. இவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற வல்லமை எமது கட்சியின் தலைமைக்குள்ளது.
எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமது பலம் நிரூபிக்கப்படும். குறிப்பாக அத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரைப் பெறுகின்ற விடயத்தில், கட்சி பெரும்பங்கை வகிக்கும். எமது கட்சியானது நாட்டின் நல்லாட்சிக்காகவும் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிய கட்சியாகவும் எமது சமூகத்தின் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
3 hours ago
3 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
03 Oct 2025