2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பாலமுனை ரைல் றைடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

Administrator   / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, பாலமுனை ரைல் றைடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 19 மாலை அல்ஹிதாயா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாலமுனை ரைல் றைடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாலமுனை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு அதிதிகளினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ரைல் றைடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஏ.சிபான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இஸ்தாபக அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா, பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுறாசபை இணைப்பாளரும் ஹட்டன் நெசனல் வங்கி உத்தியோகத்தருமான எம்.ஏ.சதாத்;, பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுறா சபையின் தலைவர்களான ஐ.எல்.சுலைமாலெவ்வை, எஸ்.சிக்கநதர், அஷ;ரப் ஞாபகார்த்த மன்றத்தின் தலைவர் ஏ.எல் அலியார், சூறா சபையின் செயலாளர் ஏ.பி.றிஜாப்;, மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விடுதி அத்தியட்சகர் ஆர்.ரகுமத்துல்லா, கவிஞர் பாலமுனை முபீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .