2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கைவிடப்பட்ட நிலையிலிருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி வீதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மேட்டார் சைக்கிளை கிண்ணியா பொலிஸார் இன்று திங்கட்கிழமை (20) மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 ஈ.பீ 8115 என்ற இலக்கம் கொண்ட மோட்டார் சைக்கிள், நேற்றிரவு முதல் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையடுத்தே பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்துள்ளனர்.

மேற்படி மோட்டர் சைக்கிள் தற்போது கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதெனவும் உரிமையாளர் ஆவணங்களை சமர்பித்து மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .