2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மேற்பார்வையாளர் நியமனங்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் மேற்பார்வையாளர்களாக நியமிக்கபட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் கடந்த 15ஆம் திகதி முதல் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூவருக்கான நியமன கடிதங்கள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் கொழும்பு காரியாலயத்தில் சனிக்கிழமை இரவு (18) முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.நஸீர் - கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் வீடமைப்பு திணைக்கள மேற்பார்வையாளராகவும் ஆர்.எம்.அன்வர் - திருகோணமலை மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சி சபைகள் மேற்பார்வையாளராகவும் ஆரிப் சம்சுதீன் - அம்பாறை மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சி சபைகள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X