2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சந்தை சதுக்க கட்டட திறப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்

Gavitha   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை - அட்டாளைச்சேனையில் 1 கோடி 70 இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்க கட்டட திறப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்  இன்று செவ்வாய்க்கிழமை (21) அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் இக்கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்க கட்டட திறப்பு விழா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.

எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி சனிக்கிமை இடம்பெறவுள்ள இத்திறப்பு விழா நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இச்சந்தை சதுக்க கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .