2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்கல்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

எதிர்காலத்தில் சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், புதன்கிழமை (22) தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேச கர்ப்பிணிகளுக்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு, சின்னப்பாலமுனை சுகாதார நிலையத்தில் இன்று நடைபெற்றது.

சுகாதார மேற்பார்வை உத்தியோகஸ்தர் ஏ.எம். ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவதன் மூலம் நாட்டில் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். இங்கு வழங்கப்பட்டுள்ள போசாக்கு உணவுகளை வீண்விரயம் செய்யாமல் உபயோகப்படுத்தப்படல் வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கும் நாட்டில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என சுகாதார மேற்பார்வை உத்தியோகஸ்தர் ஏ.எம். ஜவ்பர் மேலும் தெரிவித்தார்.

முட்டை, நெத்தலி கருவாடு, அரிசி, பயறு, சோயா, கடலை மற்றும் கச்சான் ஆகியவை உள்ளடங்கிய உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

181 கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போசாக்கு உணவுப் பொதிகள் இதன்போது வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X