2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கணிதவாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு

Thipaan   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுவரும் கணிதவாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வான கணித பயிற்சிப் பாசறை நிகழ்வு பாடசாலை மைதான திறந்த வெளியரங்கில் வியாழக்கிழமை (23) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டபட்டது.

இப் கணிதவாரம் சம்மந்தமான நிகழ்வுகள் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றன. நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கணிதவாரம் அனுஷ்டிக்கப்பட்டுகிறது.

பாடசாலை கணித மேம்பாட்டு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கணிதவார இறுதி நாள் நிகழ்வு முழு நாள் நிகழ்வாக நாளை இடம்பெறவுள்ளது.

பாடசாலை அதிபர் எம்.சரிப்தீன் தலைமையில், 24ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி நாள் நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகவும் கோட்டக் கல்விப்பணிப்பளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளார்.

கணித பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.முஸ்தபா, பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.எல்.எம்.இஸ்மாயில், ஏ.எல்.யாசின், உதவி அதிபர் ஐ.எல்.ஜலால்தீன் கணித மேம்பாட்டு குழு ஆசிரியர்களான ஐ.ஏ.ஜீமான், எம்.எச்.எம்.நஸீம், ஏ.இஹ்சாஸ், எம்.முஸ்பிறா, என்.ஆர்.பி.தவ்லத் உட்பட வலயத்தலைவர்கள் உதவி வலயத் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .