Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் விசேட கூட்டம், அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோர ஹபானா பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் அதி உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
எனது ஊருக்கு சேவை செய்தவர்களை ஞாபகப்படுத்தும் முகமாக காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் தொகுதி முதல்வருமானா டாக்டர் ஜலால்டீனுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை ஆகியோரை ஞாபகப்படுத்தும் வகையில் அவர்களின் பெயர்களை சூட்டி எதிர்வரும் 2ஆம் திகதி அட்டாளைச்சேனையில் கட்டி முடிக்கப்பட்ட சந்தைத் தொகுதிக்கு மர்ஹூம் மசூர் சின்னலெப்பையின் பெயரையும் பாவங்காய் வீதியின் பெயரை டாக்டர் ஜலால்டீன் என்ற பெயரை சூட்டி வைக்கவுள்ளோம்.
எதிர்வரும் 2ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள மாபெரும் நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை மத்திய குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் ஒத்துழைப்புக்களை தரவேண்டும் என்றார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.நஸீர், பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.பீ.எம்.ஏ.காதர், மத்திய குழுவின் ஆலோசகர்களான யூ.எல்.வாஹிட், அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.நக்பர் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago