Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை மர்ஹீம் அஷ்ரப் ஆரம்பித்ததன் நோக்கம் பல துருவங்களாக ஒற்றுமையின்றி பெரும்பான்மை கட்சிகளுடன் பிரிந்து செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகவே தவிர வேற்றுமையை உருவாக்குவதற்கல்ல' என்று பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் முன்னாள் செயலாளரும் சூறா சபையின் இணைப்பாளருமான எம்.ஏ.சதாத் தெரிவித்தார்.
பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருடன் அதிருப்தியுற்று வேறொரு குழுவாக செயற்படும் சூறா சபையின் பாலமுனை 1ஆம் பிரிவுக்கான நிர்வாகத்தெரிவு பொதுக்கூட்டம் புதன்கிழமை (22) இரவு நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.
'மர்ஹீம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியை வழி நடத்திச் செல்கின்ற உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர், ஸ்தாபக தலைவரின் வளிகாட்டலையும் அவரது கொள்கை கோட்பாடுகளையும் மறந்து செயற்பட்டு தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றனர்.
அவ்வாறான ஒரு போக்கு இன்று எமது கிராமத்திலும் எற்பட்டதன் காரணமாக இன்று நாங்கள் வேறொரு குழவாக செயற்பாடும் தேவை ஏற்பட்டது.
ஒரு அமைப்போ அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ வழி நடத்திச் செல்லும் தலைவர் தன்னிச்சையாக செயற்பட முடியாது. கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் அவ்வாறு செயற்பட்டமையினாலேயே இன்று எமது கிராமத்திலும் இவ்வாறான பிரிவுகள் ஏற்பட காரணமாக அமைந்தது.
நாங்கள் கட்சியின் கட்டுக் கோப்புக்கமைவாகவும் தலைமைத்தவத்தை மதித்தும் செயற்பட்டு வருகின்றோம். நாங்கள் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்படுவதாக ஒரு சிலர் கூறித்திரிகின்றனர். அவ்வாறு கூறுகின்றவர்களை எதிர்காலத்தில் மக்கள் இனங்கண்டு கொள்ளும் காலம் மிகவிரைவில் ஏற்படும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் யாப்பின பிரகாரம் கிராமங்கள் தோறும் மத்திய குழுக்கள்தான் இயங்க வேண்டும். இருந்தபோதிலும் எங்களால் தற்போதைய அமைப்பாளரின் கீழ் இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
அதன் காரணமாகவே நிலையான தீர்க்கமானதொரு முடிவை எட்டும் வரை சூறா சபை என்ற பெயரில் அமைப்பாளருடன் அதிருப்தியுற்ற அனைவரும் இந்த கிராமத்தில் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறான உள்ளூர் அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற பிரிவினைவாத செயற்பாடுகள் காரணமாக எமது கிராமத்திலுள்ள கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமை இன்றிய நிலை உருவாகியிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டு பிரிந்துள்ள கட்சியின் போராளிகள் அங்கத்தவர்களை இன்று மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் பக்கம் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான ஒரு செயற்பாட்டிலிருந்து கட்சியின் தீவர போராளிகளையும் ஆதரவாளர்களையும் பாதுகாக்கும் பொருட்டு வேறுவழியின்றி காலத்தின் தேவையினை அறிந்து எங்களால் உருவாக்கப்பட்ட தற்காலிக சபையே சூறா சபை என்பதாகும்.
எனவே எங்களால் உருவாக்கப்பட்ட இந்த சூறா சபையின் மூலம் எமது கிராமத்தில் கட்சியின் தற்போதைய அமைப்பாளருடன் அதிருப்தியுற்ற நிலையில் பிரிந்து செயற்பட்ட அனைவரையும் ஒன்று படுத்திய பெருமையும் புகழும் இந்த சபைக்கே உரித்தாகும் என்ற விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
சுயநல போக்குடனும் சமூகத்தை பிரித்து ஆழுவதற்கு எண்ணுகின்ற உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு மக்கள் எதிர்வரும் காலங்களில் நல்ல பாடம் புகட்ட வேண்டும்' என்று கூறினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை ஸ்தாபக அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா, கட்சியின் சூறா சபையின் தலைவர்களான ஈ.எல்.சுலைமாலெவ்வை, எஸ்.சிக்கந்தர், யு.எல்.சுபையிர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
03 Oct 2025