2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஐ.நா அதிகாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐ.நா அதிகாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை  முதலமைச்சர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (24) சந்தித்துக்  கலந்துரையாடியதாக முதலமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.நா அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் உள்ள யுத்தத்தினாலும் இயற்கை இடர்களினாலும் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து நாளாந்த ஜீவனோபாயத்துக்காக கஷ்டப்படும் விதவைகளின் நிலை குறித்து விளக்கியதாகவும் ஐ.நா.வினால் மேற்கொள்ளப்பட உத்தேசித்திருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் விதவைகளின் விடயத்தையும் கவனத்தில் எடுக்குமாறு கேட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் UNHCR அதிகாரி கொலாம் அப்பாஸ் மற்றும் UNDP  அதிகாரி சுபினாய் நந்தி ஆகியோர் தலைமையிலான குழுவினரும் கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் முதலமைச்சரின் செயலாளர், பிரத்தியேகச் செயலாளர் ஆகியோருட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X