Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.ற்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக விவசாய நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கு சலுகை விலையில் வழங்கப்பட்டு வரும் உரத்துக்கு அரசாங்கத்தினால் குறித்துரைக்கப்பட்ட கட்டணத்துக்கும் மேலதிகமான பண அறவீடு செய்யப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதாவது 50 கிலோகிராம் கொண்ட ஒரு மூடை உரம் ரூபாய் 350க்கு வழங்கப்படல் வேண்டும் என அரசாங்கத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள போதிலும் சில பிரதேசங்களின் வட்டானைமார் மற்றும் விவசாய குழுத்தலைவர்களினால் போக்குவரத்துச் செலவு, ஏற்றி இறக்கல் கூலி, களஞ்சியசாலைக் கட்டணம், நீர்க்கட்டணம், வாய்க்கால துப்பரவு செய்வதற்கான கூலி என ஒரு மூடை உரத்துக்கு ரூபாய் 750 வரை அறவீடு செய்வதாக கூறுகின்றனர்.
அரசாங்கத்தின் சலுகை அடிப்படையினால் மானியத்துக்கு இவ்வாறு மேலதிகமான முறையில் கட்டணங்கள் அறவீடு செய்வதற்கு அப்பிரதேச விவசாயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையாளர்களுக்கு சலுகை விலையில் உரம் விநியோகிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரம் தேவைப்படும் விவசாயிகள் உரம் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கைப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தமது காணிக்குரிய கமக்காரர் அமைப்பினூடாக பெரும்போக உத்தியோகஸ்தரிடம் கையளிக்க வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை உரிய காலத்தில் உரத்தை விநியோகிக்க வேண்டுமென விவசாயிகள் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று இம்முறை உர விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த போகங்களில் அதிகாரிகள் கமக்காரர் அமைப்புக்கள் நிர்வாகிகள் முறையாகச் செயற்படாததன் காரணமாக விவசாயிகள் உர தனியார் விற்பனை நிலையங்களை நாட வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago