2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி நீர்தாங்கி மேலேறி ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் ஊழியர் ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தைக் கண்டித்து இறக்காமம் பிரதேசத்தின் நீர்வழங்கல் அதிகார சபையின் நீர்தாங்கியின் மேல் ஏறி திங்கட்கிழமை (27) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.

இறக்காமம் வருப்பத்தான் சேனையைச் சேர்ந்த முகம்மது சமூன் என்பவரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

முறைகேடான முறையில் அரசியல் பழிவாங்கும் முகமாக தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தைக் கண்டித்தும் தனக்கான இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியுமே நீர்தாங்கியின் மேலேறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இப்போராட்டத்தையடுத்து அங்கு விரைந்த தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் பொது முகாமையாளர், நீர்தாங்கியின் மேலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் உறுதியளித்த பின்னர் குறித்த நபரின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகத்துக்குட்பட்ட 15 ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இவ்விடமாற்றம் முறைகேடானது என்றும் அரசியல் பழிவாங்கல் என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமை மீறல் ஆணைக்குழுவிடமும் முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X