Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம். ஜெமீல், அவருடைய 75ஆவது வயதில் திங்கட்கிழமை (27) மாரடைப்பினால் காலமானார்.
இவரின் சடலம் தற்போது தெஹிவளை, களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்படுள்ளது.
அம்பாறை - சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் கல்முனை பாத்திமாக் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
ஆங்கில மொழி முலம் கல்விகற்ற அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்று, பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமானிப்பட்டமும் பெற்றார். யாழ். பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தையும் ஐக்கிய இராச்சியம் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறைசார் மற்றும் பல்கலைகழக நிருவாகம் தொடர்பான பயிற்சியையும் பெற்றுக் கொண்டவர்.
பேராதனைப்பல்கலைக்கழகத்தின் ஆங்கில போதானாசிரியர், கல்லூரி ஆசிரியர், அதிபர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், கல்வித் திணைக்களத்தில் உயர் அதிகாரி, பரீட்சைத்திணைக்கள உதவி ஆணையாளர், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி அதிபர், இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர், முஸ்லிம் சமய கலாச்சார இராஜங்க அமைச்சின் செயலாளர், கல்வி கலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளர் அதனைத் தொடர்ந்து அவ்வமைச்சின் ஆலோசகர், என பல்வேறு உயர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
கொழும்பு கிரசென்ட் சர்வதேச பாடசாலையிலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் மார்கா ஆய்வு நிறுவனம் என்பவற்றில் ஆலோசகராகப் பணிபுரிந்தார்.
2000ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி அவர் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின் சவூதி அரேபியாவின் றியாத் சர்வதேச பாடசாலையில் 4 வருடம் அதிபராகவும் அன்னார் கடமையாற்றினார்.
இதுவரை 27 நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். இறுதியாக 500 பக்கம் கொண்ட கிராமத்து சிறுவனின் பயணம் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
2 hours ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
9 hours ago