2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'தீ விபத்தில் எரிந்த கடைகளுக்கான நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்'

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்​

கல்முனை சந்தை கட்டடத் தொகுதியில் திங்கட்கிழமை (27) ஏற்பட்ட  தீ  விபத்தில்  எரிந்த கடைகள் மற்றும் அவற்றுள் இருந்த  உடமைகளுக்குமான  நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்க பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என  கல்முனை பொது சந்தை வர்த்தக அமைப்பின் செயலாளர்  எ.எல்.எம்.கபீர், இன்று (28) தெரிவித்தார்.

மேலும், இத் தீ  விபத்துக்கான காரணத்தையும்  பொலிஸார் விசாரித்து  வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை சந்தை கட்டடத் தொகுதியில் திங்கட்கிழமை (27) ஏற்பட்ட  தீ  விபத்தில்  12 கடைகள்  முற்றாக எரிந்து  நாசமாகியுள்ளன.  

வியாபார நிலையங்களாகவும் களஞ்சியசாலைகளாகவும் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த  12 கடைகளில்  இருந்த  அனைத்து  உடமைகளும்  முற்றாக எரிந்துள்ளன.

எனவே,  எங்களது  சந்தையை  மீளமைத்து  எங்களது  வியாபார நடவடிக்கைகளை தொடர்வதற்கு    பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக முன்வரவேண்டும்.

இதேவேளை,  இவ்  தீ  விபத்து  தொடர்பாக  12 கடைகளிலும்   வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் எங்களது வியாபாரிகள் கல்முனை பொலிஸாரிடம்  தங்களது  முறைப்பாடுகளை  பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .