2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'முகாமைத்துவ உதவியாளர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வேண்டும்'

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வரும் முகாமைத்துவ உதவியாளர்களின் தொழில் உரிமைகள் வென்றெடுக்கப்படும்வரை மே தின கொண்டாட்டங்களை அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கம் நடத்தப்போவதில்லை என சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாறக், செவ்வாய்கிழமை (28) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
முகாமைத்துவ உதவியாளர்களுக்கு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகள், அவர்கள் சேவையில் இருக்கும் காலத்தில் மட்டுமல்ல அவர்கள் ஓய்வுபெற்றுச் சென்று வீட்டில் இருக்கும்போதும் கூட வேதனையடைய செய்யப்போகிறது.
 
முகாமைத்துவ உதவியாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பினையோ நஷ்டத்தினையோ ஏற்படுத்தப்போவதில்லை.

முகாமைத்துவ உதவியாளர்களின் தொழில் உரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்களின் நிலவரம் நாளுக்கு நாள் கவலைக்கிடமாகிக் கொண்டிருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளாக தங்களின் தொழில்சார் பிரச்சினைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியப்படுத்திக்கொண்டே வருகின்றோம். எனினும், இன்னும் அவர்கள் எங்களை திரும்பிப் பார்க்கத் தொடங்கவில்லை.

முகாமைத்துவ உதவியாளர்கள் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தோற்றுவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்படி பலமுறை கேட்டிருந்தோம். அவர்கள் அதனை கருத்திற்கொள்ள தவறியிருந்தனர்.
 
முகாமைத்துவ உதவியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளையும் நாம் மிகவும் தெளிவாக எந்தவொரு சாராருக்கும் பாதிப்பு இல்லாமலும் நஷ்டம் இல்லாமலும் முகாமைத்துவ உதவியாளர்கள் நன்மையடையக் கூடியவாறு முன்வைத்திருந்தோம்.
 
தற்போதைய அரசாங்கத்திடமும் எங்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுக்கொண்டு வருகின்றன. எனவே, முகாமைத்துவ உதவியாளர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும்வரை தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் எதனையும் நடத்தப்போவதில்லை என அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .