2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பசு மாடுகளை சித்திரவதை செய்தவருக்கு பிணை

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் பசு மாடுகளை சித்திரவதை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்த நபரை 75 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி பேரின்பராசா திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்.

மேலும் அவரிடமிருந்த பசு மாடுகளை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் கொண்டு செல்வதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முத்தியமுகாம் 16ஆம் கொலனியைச் சேர்ந்த 3 பசுமாடுகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து சித்திரவதை செய்து, கால்நடையாக ஞாயிற்றுக்கிழமை (26) எடுத்துச்சென்றமை தொடர்பில் குறித்த நபர் மத்தியமுகாம் பொலிஸாரரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை திங்கட்கிழமை (27) கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி பேரின்பராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .