2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

காட்டு யானை தாக்கி விவசாயி மரணம்

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, ஹிங்குறாணை தீனவத்தை கிராமத்தில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தமன பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை(29) அதிகாலை 3.30 மணியளவில் காட்டு யானைக் கூட்டம் கிராமத்துக்குள் புகுந்துள்ளது.

அதில் ஒரு யானை, கிராம வாசியான சுதுகொடகே அல்பேர்ட் ருத்ரிகோ (வயது 65) எனும் விவசாயியைத் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது ஹிங்குறாணை வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமன பொலிஸார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X