2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாவனைக்குதவாத உணவுகள் மீட்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்குப் பல்கலைக்கழக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் மனித நுகர்வுக்குதவாததும் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கக் கூடியதுமான அதிகளவிலான உணவுப் பொருட்கள் மற்றும் பாவனைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல். அலாவுதீன், செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தார்.

மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பி. பேரின்பலம் தலைமையில் கல்முனைப் பிராந்தி உணவுகள், மருந்து பரிசோதகர், அட்டாளைச்சேனை பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜவ்பர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களைக் கொண்ட குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இதன் போது, பல நாட்கள் கடந்த சமைத்த கறிவகைள், பூஞ்சணம் பிடித்த ரொட்டிகள், மரக்கறிகள், காலம் கடந்த கிழங்குகள், திறந்த நிலையில் காணப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பாவனைக்குதவாத சமையல் உபகரணங்கள், பாத்திரங்கள் என்பன கண்டு பிடிக்கப்பட்டு அவைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இவ் உணவக உரிமையாளருக்கெதிராக நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.  

இதேவேளை, பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது தேநீர்கடை ஒன்றில் பாவனைக்குதவாத, மனித நுகர்வுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் உணவுப் பொருட்கள் வைத்திருந்தமை மற்றும் சுகாதார தன்மையுடன் உணவுகளை விற்பனை செய்யாமை போன்றன கண்டறியப்பட்டதுடன் இவற்றுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .