2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை 16ஆம் பிரிவின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், புதன்கிழமை (29) கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

2015ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இதன்போது இடம்பெற்றது.

தலைவராக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பி.கைறுத்தீன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக எம்.ஐ.நிலாம் மற்றும் பொருளாளராக ஏ.எல்.எம்.முபஷ்ஷிர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.ஏ.ஜாபீர், கிராம சேவை உத்தியோகஸ்தர் எம்.ஜிப்ரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .