Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கிவரும் பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தின நிகழ்வு புதன்கிழமை (29) நடைபெற்றது.
கடந்த வருடம் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட பொது நூலகங்களுக்கான தரப்படுத்தல் போட்டியில் பிரதேச சபைகளின் கீழ் இயங்குகின்ற நூலகங்களுள் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ள பேத்தாழை பொது நூலகமானது, கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற நூலகங்களுள் தரம்-2க்கு தரமுயர்த்தப்பட்டுள்ள முதலாவது பொது நூலகமுமாகும்.
உலக புத்த தினத்தையொட்டி, பிரதேச நலன் விரும்பிகள் நூலகத்துக்கு நூல்களை அன்பளிப்பு செய்தனர்.
கிழக்கின் மூத்த படைப்பாளிகளான, 50 வருடங்களுக்கு மேலாக சமூக, கலை, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாழைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு நிலை அதிபரும் பிரதேச சமய இலக்கிய முன்னோடியும் சோதிடருமான பெ.புண்ணியமூர்த்தி, வாகரையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர். வித்துவான் எஸ்.வாகரைவாணன், திருப் பழுகாமத்தைச் சேர்ந்த கவிஞர். ஆ.மு.சி.வேலழகன் ஆகிய மூன்று மூத்த படைப்பாளிகளையும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பேத்தாழை பொது நூலகத்தின் நிறுவனரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.
நூலகத்தின் நூலகர் அ.அருமைநாயகம் தலைமையின் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.எஸ்.எம்.சிஹாப்தீன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.குகநேசன் மற்றும் வாசகர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
3 hours ago
3 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
03 Oct 2025