2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

குற்றச் செயல்கள் குறைந்துள்ள போதிலும் சிறுவர்களின் அனாகரிகமற்ற செயல்கள் அதிகரித்துள்ளன

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் குற்றச்செயல்கள் குறைந்து வருகின்றன. ஆனால், சிறுவர்களின் அனாகரிகமற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.எல் ஜெமீல் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில்; இன்று(30) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற, பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவினருடனான சந்திபொன்றில்; கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர்; உரையாற்றுகையில்,

பெற்றோரின் அறியாமை மற்றும் கவனமின்மை காரணமாக இளவயது திருமணமும் அதிகரித்துள்ளது. இதற்கான தீர்வினை பெற்றோர்களும் சிவில் பாதுகாப்பு குழுவிலுள்ள் பெரியோர்களும் இணைந்து காணவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இங்கு சிவில் சமூகத்தவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், அக்கரைப்பற்று பனங்காட்டு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி கனிய வளங்களை அகழ்வு செய்வதாக பிரதேச செயலாளரிடமும் பொலிஸ் மா அத்தியட்சகரிடமும் முறையிட்டதுடன் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கௌ;ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒருவர் கருத்து வெளியிடுகையில், பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைகளினால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்தார். அத்தோடு சிவில் பாதுகாப்பு குழுவினருக்குரிய கௌவரம் பொலிஸ் நிலைங்களில் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கருத்துக்களுக்கு பதிலளித்த பொலிஸ் பொறுப்பதிகாரி எதிர்காலத்தில் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் யாவும் நிவர்த்தி செய்யப்படும்; என்றார்.

இக்கருத்தரங்கில் அக்கரைப்பற்று பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி கேமந்த, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் உப பரிசோதகர் எச்.யு சமந்த, பிரதேச செயலக உத்தியோத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழுவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .