Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 02 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
ஒரு சில அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அன்றைய காலப்பகுதியில் இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு கூறு போடப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேசம் ஒரு தொகுதியின் கீழ் உள்வாங்;கப்பட வேண்டுமென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகரம் ஒரு தொகுதியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சூறாக்கவுன்சில் முக்கியஸ்தர்கள், கல்வியலாளர்கள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்களுடனான கலந்துரையாடல் சமீபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை விடுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேலும் தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று பிரதேசம் ஒரு தொகுதியின் கீழ் உள்வாங்கப்பட வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது நாடாளுமன்றத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய சில கட்சிகளும் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தொகுதி ரீதியிலான நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும். அப்போது அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு என்றுமே ஒரு நாடாளுமன்ற பிரதிநிதி கிடைக்காது. ஏனெனில் சுமார் 29,000 வாக்குகளைக் கொண்ட இப்பிரதேசம் இரண்டு தொகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தின் பிரதான வீதியின் கிழக்கு பக்கம் பொத்துவில் தொகுதியையும் மேற்கு பக்கம் சம்மாந்துறை தொகுதியையும் கொண்டது. கடந்த காலத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்கள் பிரதிநிதி தனது அரசியல் சுயநலன்களுக்காகவும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் எமது ஊரை இரண்டாக பிரித்து இரு தொகுதிக்குள் உள்வாங்கச் செய்தார். இவ்விடயம் ஒரு வரலாற்றுத் துரேகமாகும்.
தற்போது அம்பாறை தொகுதி இரு தொகுதிகளாக பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அறியக் கூடியதாகவுள்ளன. அம்பாறை தமண, உகண பிரதேச செயலக எல்லைகளை வரையறுத்து அம்பாறை தொகுதி என்றும் பதியத்தலவ, தெஹியத்தக்கண்டி, மகோயா ஆகிய பிரதேச செயலக எல்லைகளை வரையறுத்து மகோயா தொகுதி என்றும் செயற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அம்பாறை மாவட்ட செயலகத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொத்துவில் தொகுதிகளை எடுத்துக்கொண்டால் ஒரு தனிப்பிரதேசத்தில் 29,000 வாக்குகளைக் கொண்ட கிராமம் என்றால், அது அக்கரைப்பற்று பிரதேசத்தையே கூறலாம். இப்பிரதேசம் இரு தொகுதிக்குள் கூறு போடப்பட்டுள்ளதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது ஊரை ஒரு தொகுதியின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும். இவ்விடயம் நமது பிரதேசத்தில் இருபது வயதைக்கொண்ட இளைஞர் சமூதாயத்துக்கு செய்யும் நல்ல செயலாகும்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் தொகுதி முறையிலான தேர்தல் வருகின்ற போது, அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு வாக்களிக்க முடியாத நிலை தற்போது உள்ளது. இது அவர்களது அடிப்படை உரிமை மீறலாகும். நாம் அனைவரும் சேர்ந்து நமது பிரதேசத்தை ஒரு தொகுதியின் கீழ் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இது விடயத்தில் வெற்றி கிடைக்காது போனால் உயர் நீதி மன்றத்துக்கு சென்றாவது நமது உரிமையை வெற்றெடுக்க வேண்டும் என்றார்.
இறுதியாக அக்கரைப்பற்று பிரதேசம் ஒரு தொகுதியின் கீழ் உள்வாங்;கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இங்கு ஏகமனதாக நிறைவேற்றப்பட்;டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
6 hours ago