2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வாகன தரிப்பிடத்தை அமைத்து தருமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 மே 10 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்கிவரும் கோணாவத்தை பொது நூலகத்துக்கு வாகான தரிப்பிடம் ஒன்றை அமைத்து தருமாறு வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கோணாவத்தைப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கிவரும் இந்நூலகத்துக்கென தனியான வாகானத்தரிப்பிடமின்மையால் நாளாந்தம் வருகைதரும் வாசகர்களும் பாடசாலை மாணவர்களும் தங்களது மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை வீதியோரங்களில் நிறுத்தி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுடன் வீதிப்போக்குவரத்துக்கும் தடையாகவுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே வாசகர்களின் நன்மை கருதி இந்நூலகத்துக்கு அருகிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் வாகான தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X