Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 12 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன் பிரதேச சபையின் புதிய கட்டடம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் சி.குணரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், த.கலையரன், ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மிக நீண்டகாலமாக தற்காலிக கட்டடத்தில் இயங்கிவந்த இந்த பிரதேச சபைக் கட்டடம் நகர எழுச்சித் திட்டத்தின் கீழ் சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த பிரதேச சபைக் கட்டிடத்தில் பொதுமக்கள் அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், உள்ளூராட்சிமன்ற அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago