2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஐவர் கைது

Thipaan   / 2015 மே 12 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், எஸ்.ஜமால்டீன்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்களுடன் பொலிஸார் இணைந்து திங்கட்கிழமை (11) இரவு மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 3 பெண்களும் 2 ஆண்களும் அடங்குவதாகவும் இவர்கள் ஆலையடிவேம்பு, பனங்காடு உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து கைது செய்யப்பட்டதாகவும்  பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .