Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 09 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பெற்றோர் உங்கள் பிள்ளைகளை ஒழுக்க சீடர்களாக வளர்த்தெடுத்து நாட்டில் சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு, சின்னப்பாலமுனை பல்தேவை கட்டடத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'நாட்டில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமது பிள்ளை தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் பிள்ளையின் எதிர்காலத்தை சிறந்ததாக முன்கொண்டு செல்லமுடியும்' என அவர் தெரிவித்தார்.
'சில பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பில் ஏனோ தானோ என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். இவ்வாறான நிலைப்பாட்டிலுள்ள குடும்பங்களினால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, பெற்றோர்; உங்கள் பிள்ளைகளை ஒழுக்க சீடர்களாக வளர்த்தெடுத்து நாட்டில் சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago