2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சிறுவர் தின பார்ட்டி ; பாடசாலைக்கு மது போத்தலுடன் வந்த 4 மாணவர்கள் கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 03 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பாடசாலைக்கு மது போத்தலை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மீட்டியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காவலில் வைக்கப்பட்ட நான்கு மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தர தேர்வு எழுதவிருந்தவர்கள். நேற்று முன்தினம் (1) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் நான்கு மாணவர்களும் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சிறுவர்கள் தினத்தன்று நேற்று முன்தினம் (1) பாடசாலைக்கு மது போத்தலைலை கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மது கொண்டு வந்ததாக பாடசாலையிலிருந்து கிடைத்த தகவலின்படி, அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது, ​​ஹிக்கடுவையில் உள்ள ஒரு மதுபானக் கடையில் இருந்து மது வாங்கி தண்ணீர் போத்தலில் ஊத்திக்கொண்டு தெரியவந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X