Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 09 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.எஸ்.கார்த்திகேசு
யுத்தம் முடிந்து ஆறு வருடங்களானபோதிலும், அம்பாறை மாவட்டதில் 1,103 குடும்பங்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாது வாழ்ந்துவருவதாக கிழக்கு மாகாணசபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ரி.கலையரசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) விடுத்துள்ள அறிக்கையில், 'திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சாகாமத்தில் 126 குடும்பங்களும் காஞ்சிரங்;குடாவில் 68 குடும்பங்களும் கஞ்சிகுடியாற்றில் 244 குடும்பங்களும் தங்கவேலாயுதபுரத்தில் 270 குடும்பங்களும் வன்னியிலிருந்து அம்பாறை மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்த 63 குடும்பங்களுமாக 771 குடும்பங்களும் மீள்குடியேற்றப்படாதுள்ளன' என்றார்.
மேலும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரத்தில் 108 குடும்பங்களும் பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கனகர் கிராமத்தில் 178 தமிழ், சிங்கள குடும்பங்களும் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சவளக்கடை, கம்பிக்காலையில் 46 குடும்பங்களும் மீள்குடியேற்றப்படாதுள்ளனர்' என அவர் கூறினார்.
25 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago