2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

ரமழானை முன்னிட்டு சிரமதானம்

Princiya Dixci   / 2015 ஜூன் 12 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

புனித ரமழானை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) காலை 7.00மணிக்கு இடம்பெறவுள்ளது.
 
அல்-இபாதா கலாசார மன்றத்தினால் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இவ்வருடமும் மிகவும் பிரபல்யமிக்க உலமா பேரறிஞ்களைக் கொண்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இதனை முன்னிட்டு மார்க்க சொற்பொழிவு வழமையாக இடம்பெற்று வரும் பெரியபாலத்தடி ஆற்றங்கரைப் பிரதேசத்தை சுத்தம் செய்யும் சிரமாதான நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X