Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (21) காலை நடைபெறவுள்ளதாக பட்டதாரிகள் அமைப்பின் உறுப்பினர் மா.திலீபன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் அ.அரிகரன் தலைமையில் நடைபெறும் சந்திப்பில், கிழக்கு மாகாணசபை சபாநாயகர் சந்திரதாஸ கலப்பதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிவருகின்ற வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதாக உறுப்பினர் மா.திலீபன் தெரிவித்தார்.
மேலும் இக்கலந்துரையாடலின் பின்னர் சபாநாயகர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் மூலம் தங்களது கோரிக்கைக்கான நியாயமாக தீர்வுகள் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது 300க்கும் மேற்பட்ட தழிழ் பட்டதாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
7 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
56 minute ago
2 hours ago