Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 21 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு விரைவில் கொண்டு செல்லப்படுமென கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி, இன்று ஞாயிற்றுக்கிழமை (21) உறுதியளித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை தவிசாளருக்கும் இடையிலாக சந்திப்பு, ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஜனவரி மாதத்துக்குப் பின்னரே நாட்டில் சுமூகமான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதனூடாக நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் சிறந்த ஸ்திரமான நிலையில் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகவே, எதிர்வரும் காலத்தில் சிறந்த நிலையான நேர்மையான அரசை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதுடன் எதிர்காலத்தில் 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தினையும் வகுத்து வருகின்றார்.
சமகாலத்தில் கல்விக்கல்லூரி செல்கின்றவர்கள் கல்வியை நிறைவு செய்து வெளியேறுகின்போதே தொழில் வாய்ப்பினை பெறுகின்றனர். ஆனால், பல்கலைகழகம் செல்கின்றவர்கள் 04 வருடங்கள் கடந்தும் தொழில் வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கி கிடப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
ஆகவே, தமிழ் பட்டதாரிகளின் நிலை குறித்து முதலில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேசப்படும். அதற்கும் தகுந்த சாதகமான பதில் கிடைக்காதவிடத்து ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத்தருவற்கு ஆவண செய்வேன் என்றார்.
43 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago