2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

யுத்தத்தினால் பாதிப்புற்றோரை கணக்கிட நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

யுத்தத்தினால் உயிரிழந்தோர், அங்கவீனமுற்றோர், சொத்துடைமைகளின் இழப்பு மற்றும் காணாமல் போனவர்களுக்கான நட்டஈடு வழங்குவது தொடர்பான ஆவணங்களை ஒழுங்குபடுத்தும் நடமாடும் சேவை ஒன்று, இன்று புதன்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் நடைபெறுகின்றது.

இந்த சேவையானது திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடமாடும் சேவையின் பயனைப்பெறும் பொருட்டு திருக்கோவில் பிரதேச மக்கள் பலர் கலந்துகொண்டதுடன் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டு பொதுமக்களின் தேவைகளை ஆவணங்களாக பூர்த்தி செய்துகொண்டனர்.

பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நடமாடும் சேவையானது நாளை வியாழக்கிழமை (25) திருக்கோவில் பிரதேசத்தில் கலாசார மத்திய நிலையத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X