2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

புதிய வைத்திய அத்தியட்சகரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம். ஹனீபா
 
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய அத்தியட்சகரின் வருகையை எதிர்த்து, அவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் ஊழியர்களும் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று வியாழக்கிழமை (25)  ஈடுபட்டனர். 
 
வைத்தியசாலையில் பணியாற்றுவோர் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அறியாது, வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 

இதனால், ஆத்திரமடைந்த நோயாளர்களும் பொதுமக்களும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை முற்றுகையிட்டதோடு, வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் சம்மாந்துறைப் பொலிஸாரின் தலையீட்டால் நோயாளர்களும் பொதுமக்களும் கலைந்து சென்றனர்.
 
இவ்விடயம் தொடர்பாக கடமையிலுள்ள வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸீஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
 
'தனக்கும் இந்த வேலை நிறுத்தத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது வைத்தியர்களின் சங்கம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தம். இது தொடர்பாக நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை' என மறுத்து விட்டார்.
 
இது விடயமாக வைத்தியர் சங்கச் செயலாளர் டாக்டர் ஐ.எம்.சிறாஜிடம் வினவிய போது, 'சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குப் புதிதாக மேலதிகமாக சட்டமுறைகளுக்கு அமைவில்லாமல் ஒரு வைத்திய அத்தியட்சகர் வர இருப்பதாக அறிந்தோம். அதற்காகவே எமது சங்கம் இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளது.
 
அவசர நோயாளர்களுக்கு சிகிச்சை இடம்பெற்றதாகவும் டாக்டர் ஐ.எம். சிறாஜ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X