2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய இரு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஜூன் 26 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

வீட்டுக்கு முன்பாக உள்ள வீதியில் இரவுவேளையில் நின்றுகொண்டிருந்த நபரை கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய சந்தேக நபர்கள் இருவரையும்; எதிர்வரும் 29ஆம் திகதி (29.06.2015) வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.எஸ்.அப்துல் றஸீட் உத்தரவிட்டார்.

இரு சந்தேகநபர்களையும் இன்று வெள்ளிக்கிழமை (26) மன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்று 6ஆம் பிரிவு காதர் ஓடாவி வீதியில் உள்ள தனது வீட்டுக்கு முன் வீதியில் நின்ற முஹம்மட் இஸ்ஸடீன் (51 வயது) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை (23) இரவு 8.30 மணியளவில் வீதியால் வந்த இருவர் கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். காயமடைந்தவர் பொலிஸில் செய்தமுறைப்பாட்டையடுத்து பொலிசார் தலைமறைவாக இருந்த இரு சந்தேகநபர்களையும் நேற்று(25) மாலை கைது செய்ததுடன் வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X