Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 27 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டமடு மேய்ச்சல் தரையில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதனால், தமது மேய்ச்சல் தரையை பெற்றுத்தருமாறு கோரி கால்நடை பண்ணையாளர்கள் சங்கம் தமது கால்நடைகளுடன் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று சனிக்கிழமை (27) ஈடுபட்டனர்.
1971ஆம் ஆண்டு அரச வர்த்தமாணியில் சுமார் 4,000 ஏக்கர் காணிகள் மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்ட போதிலும் இன்று வரை கால்நடை பண்ணையாளர்களக்கும் விவசாயிகக்கும் இடையில் முருகல் நிலை காணப்பட்டு வருகின்றது.
இதனை சுமுகமாக தீர்த்து எமது வாழ்வாதார தொழிலில் முக்கிய சக்தியாக இருக்கின்ற கால்நடைகள் உயிர்வாழ்வுக்கான உத்தரவாதத்தினை வழங்கி, 200க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்துமாறு தொடர்ச்சியாக வட்டமடுவில் ஆர்ப்பாட்டங்களை கால்நடை பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தீர்வுகளை இந்த நல்லாட்சியிலாவது பெற்று தருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் இதற்கான தீர்வுகள் கிடைக்காத நிலையில் தாம் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை பிரதேசம் மற்றும் மாவட்ட மட்டங்களில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
02 Oct 2025
02 Oct 2025