2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம்: அலாவுதீன்

Princiya Dixci   / 2015 ஜூன் 30 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அட்டாளைச்சேனை பிரதேச சபையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து அட்டாளைச்சேனையில் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல்.அலாவுதீன் இன்று செவ்வாய்க்கிழமை (30)  தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களிலும் உணவுப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு அதன் உரிமையாளருக்கு பிரதேச மாட்டத்தில் விழிப்புணர்வு செயலமர்வுகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

மேலும், உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் மாதிரிகளை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி நுகர்வுக்கு பொருத்தமானதா? என கண்டறிவதுடன் உணவு கையாளும் நிலையங்களை தரப்படுத்தி 01ஆம், 02ஆம், 03ஆம் இடங்களைப் பெறும் உணவகங்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இதேவேளை, உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சுகாதார நிலைமை மற்றும் தேக ஆராக்கியம் என்பன ஆராயப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X