Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் தொகுதிகள் ரீதியாக வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வயது குறைந்த வேட்பாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக கல்முனை மாநகரசபையின் கோரிக்கைகளுக்கு அமைவாக கல்முனை மாநகரசபையின் ஒரேயோரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ஏ.எச்.எச்.எம்.நபார் அந்த இடத்துக்கு கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நம்பகமாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தங்களது கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்து வருகின்றன.
அந்த அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலும் சில முன்ணிலைக் கட்சிகளை நோக்கி வேட்பாளர்கள் படையெடுக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கி கட்சிகள் முதல் தனி நபர்கள் வரை அணிதிரளும் இவ்வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரான ஏ.எச்.எச்.எம்.நபார், நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினருமாவார்.
7 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
5 hours ago