Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 02 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் லிபரல் கட்சி, தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியுடன் கூட்டிணைந்து அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் தமது வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் இஸ்மா லெப்பை செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.
கடந்த பல தேர்தல்களில் சுயட்சையாக தேர்தலை சந்தித்து தமது செல்வாக்கை பெருக்கிகொண்டதுடன் மட்டுமின்றி, முஸ்லிம் லிபரல் கட்சி பலகாலமாக அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளதுள்ளதுடன் சமூகத்தில் நல்ல செல்வாக்கும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியினால் முன் வைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி கொள்கைளை தமது முஸ்லிம் லிபரல் கட்சி வரவேற்பதாகவும்; ஏனைய கட்சிகள் பதவி மற்றும் அதிகாரங்களை மட்டும் கைப்பற்றும் கொள்கைகள் கொண்ட கட்சிகளாகவே உள்ளன எனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில், தேசிய ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து வேட்பாளர்களை நிறுத்தி தமது மக்களின் சிறந்த எதிர்காலத்துக்காக பாடுபட போவதாகவும் தங்களது இணைவானது மக்கள் சேவைக்கான இணைவாக அமையும் எனவும் இஸ்மா லெப்பை தெரிவித்தார்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025