Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 03 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.ஜே.எம்.ஹனீபா, ரீகே.றஹ்மத்துல்லா
பொத்துவில் ஆதார வைத்தியசாலை வீதி, 25 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் காபட் வீதியாக புனரமைக்கபட்டு வருகின்றது.
இதற்கான நிதியொதுக்கீட்டை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இவ்வீதியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை, வாசிகசாலை, கலாசார மண்டபம், பெரியபள்ளி வாயல் மற்றும் பாடசாலைகள் என அமைந்த பொத்துவில் பிரதேசத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு வீதியாகக் காணப்பட்ட போதிலும் மிக நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலேயே இருந்து வந்தது.
பொத்துவில் பிரதேச மக்கள் இவ்வீதியின் அவலநிலை குறித்து முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கமைவாக உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் முயற்சியில் கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இதற்கான நிதியொதுக்கீட்டினை கடந்த வருடம் ஒதுக்கிருந்தமை குறிப்படத்தக்கது.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025