Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
'காமேஷ்வரி ரசாயனம்' என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த லேகியத்தைக் கைப்பற்றியதோடு, அதனை தம்வசம் வைத்திருந்த நிர்மல் நித்தியானந்தன் என்பவரையும் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றரைக் கிலோகிராம் கஞ்சா விதையையும் இலையையும் கலந்து தயாரிக்கப்பட்ட லேகியத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேக நபரின் வீட்டை வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் சுற்றிவளைத்த புலனாய்வுப் பொலிஸார் லேகியத்தை கைப்பற்றியதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஏ. அனுஜன் தலைமையிலான தேடுதல் அணியில் பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஏ.எம். பிர்தௌஸ், எம். ரஸீன், எம்.ஏ. நவாஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான நிர்மல் நித்தியானந்தன் (வயது 32) என்பரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025