Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஓய்வூதியகாரர்களுக்கான இலத்திரனியல் அடையாள அட்டையினை ஓய்வூதிய திணைக்களம் ஜூன் மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்தியுள்ளதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இவ் அடையாள அட்டையில் ஓய்வூதியம் பெறுபவர், அவரில் தங்கி வாழ்பவர்கள் பற்றிய தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இவ் அட்டையின் மூலம் உள்ளூர் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் இலத்திரனியல் அடையாள அட்டையை தேர்தல் மற்றும் உத்தியோக நடவடிக்கைகளுக்கான அங்கிகரிக்கப்பட்ட அடையாள அட்டையாகவும் பயன்படுத்த முடியுமென ஓய்வூதிய திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
புதிய இலத்திரனியல் அடையாள அட்டை மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் நான்கு இலட்சம் ஓய்வூதியகாரர்கள் நன்மை பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025