Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வீதியோர வியாபாரிகள் அகற்றப்பட்டு வீதியோரங்களில் மரக்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதென அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.
பிரதான வீதி ஓரங்களிலும் வடிகான்களுக்கு அருகாமையிலும் மீன், மரக்கறிகள் மற்றும் பழவகைகள் என்பன விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சுகாதாரத்திற்கு கேடான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இது குறித்து பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, சுகாதார அதிகாரிகள், அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து குறித்த பிரதேசங்களுக்கு நேற்று (03) சென்று வீதியோர வியாபாரிகளை அகற்றியுள்ளதோடு சுகாதாரத்திற்கு பெரும் அச்சருத்தலாகக் காணப்பட்ட வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளதோடு, வடிகான்கலுக்கு பாதுகாப்பு மூடிகளும் இடப்பட்டுள்ளது.
இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படமென சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் கூறினார்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025