Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 05 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் உருவாக்கிய யுகப் புரட்சி பாதுகாக்கப்பட வேண்டும். விஷேடமாக முஸ்லிம்களினால்; பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டடத்துக்;கான நிதி; கையளிக்கும் வைபவம் மற்றும் இப்தார் நிகழ்வு என்பன சம்மாந்துறை ஜம் இய்யத்துல் உலமாசபைக் கட்டடத்தில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல்காதர் தலைமையில் சனிக்கிழமை (04) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எதிர்வரும் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு, அதன் வியூகம் அதன் தலைமைத்துவத்தினால் எவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளது என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
அவ்வாறு நாம் எடுக்கின்ற தீர்மானத்துக்கு ஏற்ப எமது தேர்கல் களத்தையும் தயார்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் எமது வியூகத்தினால் எடுக்கப்படுகின்ற முடிவுகளை எமது மக்களும் எமது சமூகபொது அமைப்புக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதனை ஏனைய அரசியல் தலைமைகள் அவதானமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த 48 மணித்தியாலத்தில் எதி;ர்கட்சியில் ஏற்பட்ட திடீர் முடிவு தளம்பல், விநோதங்கள் எதிர்பாக்கப்பட்ட போதிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகள் எடுக்கின்ற முடிவுகளில் அவதானத்தை செலுத்தியதனால் தாங்கள் மேற்கொண்ட சாதகமான வியூகத்தினால் எதிரணியின் முடிவு தமது பேரம் பேசும் சக்தியை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் சம்மாந்துறை மக்கள் இன்று மிகவும் ஆர்வமாகவும் ஆவலாகவும் இழந்து நிக்கின்ற நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்கு எதிர்காலத்தில் என்ன நடைபெறப் போகின்றது என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காண்படுகின்றனர் என தெரிவித்தார்.
மர்ஹூம் அமைச்சர் அன்வர் இஸ்மாயில் உருவாக்கிய இந்த உலமாசபைக் கட்டடத்துக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் இலங்கை சவூதி ஆரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமினால் கட்டட வேலைகளுக்காக 1மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தன்னுடைய நிதியிலிருந்து இன்னும் 01 மில்லியன் ரூபாய் தருவதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும். இலங்கை சவூதி ஆரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர், கட்சியின் உயர் பீட உறுப்பினர் சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.முஸ்தபா, பிரதேச செயலாளர்களான ஏ.மன்சூர், எம்.எம்.நஸீர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஜீம் உட்பட ஊர்பிரமுகர்கள் உயரதிகாரிகள் என பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025