Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, உகந்தை முருகன் கோவிலை அண்டிய கடற்கரையோரத்தில் ஜெலி மீன்கள் (சொறிமுட்டை அல்லது நுங்குமீன்) கரையொதுங்குவதால், அக்கடலில் நீராடுகின்றவர்களும் ஏனைய தேவைகளை பூர்த்திசெய்கின்றவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட அதிகாரி கே.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
நச்சுத்தன்மையுடைய ஜெலி மீன்கள் உடலில் தொடுகை அடைவதால் அதிகவலி, ஒவ்வாமை ஏற்படுகின்றது. உடனடியாக முதலுதவிகளை பெறுவதன் மூலம் பாதிப்புக்களை தவிர்க்கமுடியுமென்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்களையும் அம்பாறை மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை குறித்த பகுதியில் ஆங்காங்கே செவ்வாய்க்கிழமை (07) மாலை ஒட்டியுள்ளன.
அண்மையில் உகந்தை கடலில் சிலர் நீராடிக்கொண்டிருந்தபோது, கடிப்பது போன்ற ஒரு உணர்ந்தனர். அப்போது, சுமார் இரண்டு அடி வரையான ஜெலி மீன்கள்; மிதந்ததையும் இவர்கள் அவதானித்ததாகவும் தெரியவருகின்றது.
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025