Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 09 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
ஒரு சமூகத்தின் கலை, கலாசாரங்களை ஏனைய சமூகங்கள் அறிந்து கொள்ளும் போது இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்த்துக்கொள்ள முடியுமென அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி வணிகசிங்க, புதன்கிழமை (08) தெரிவித்தார்.
இனநல்லுறவை வளர்க்கும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் மார்க்க சொற்பொழிவும் இப்தார் நிகழ்வும், பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
மற்றைய இனத்தவர்களின் கலை, கலாசாரங்களை புரிந்துகொள்ளாததன் காரணமாவே பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் மனதை புன்படுத்தும் செயற்பாடுகளுக்கும் காரணமாக உள்ளன.
முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்களவர்கள் ஆகிய மூவினங்களும் செறிந்து வாழ்ந்து வருகின்ற இந்த அம்பாறை மாவட்டம் ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமான மாவட்டமாக திகழவேண்டும்.
காரியாலய, அலுவலகங்களின் ஊழியர்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து இவ்வாறு ஒரு சமூகத்தின் கலாசார நிகழ்வினை நடத்துவதனால் குறித்த சமூகத்தின் கலாசாரத்தை ஏனைய இனத்தவர்கள் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதுடன், இனங்களுக்கிடையிலான நல்லுறவும் எற்படுவதற்கான சந்தர்ப்பமும் உண்டாகின்றது.
இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு கஷ்டம் பாராது பல தியாகளுக்கு மத்தியில் புனித நோன்பினை முஸ்லிம்கள் நோற்கின்றனர். ஏனெனில், இறைவனிடத்திலிருந்து இதற்கான சிறந்த பலாபலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.
இஸ்லாத்தின் அத்தனை விடயங்களும் இவ்வாறு கடமைப் பொறுப்புக்கள் வாய்ந்தனவாகவுள்ளன. அந்த வகையில் மக்களுக்கான பணிகளையும் தமது கடமைகளையும் அரச ஊழியர்களான ஒவ்வொரு வரும் நேர்த்தியாக மேற்கொள்வார்களாயின் நிச்சயம் இறைவனின் நல்லாசியைப் பெற்றவர்களாக மாற முடியும் என்றார்.
17 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
9 hours ago
02 Oct 2025