2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்தை இடைநிறுத்தி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறையிலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான வழித்தடத்தில் மேலதிகமாக ஒரு பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையால் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாலேயே, இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

வழமையாக இரவு ஏழு மணிக்கு ஒரு பஸ் சேவையும் எட்டு மணிக்கு ஒரு பஸ் சேவையும் அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமையிலிருந்து இரவு 7.45 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கான ஒரு புதிய பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வழமையான தமது பயணிகளின் எண்ணிக்கை இல்லாமல் போவதாகவும் அவர்கள் கூறினர்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிகள் நேரடியாக அம்பாறை நோக்கி வருவதன் நன்மை கருதியே பொருத்தமான இந்த வேளையில் தாங்கள் இந்தத பஸ் சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X