2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

நியாயமான முறையில் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும்: இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

Sudharshini   / 2015 ஜூலை 11 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்களை, முறைகேடான முறையில்; நிரப்பாமல், நியமன நியதிகள், இடமாற்ற விதிமுறைகளுக்கமைய நிரப்புமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (10) அனுப்பி வைத்துள்ள மகஜரிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. 

அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழுள்ள பொத்துவில் உப கல்வி வலயத்தில் கடமையில் இருந்தவர்கள் ஓய்வுபெற்றதையடுத்து, அலுவலகத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கான வெற்றிடமும் உப வலயத்தின் பொறுப்புதாரிக்கான வெற்றிடமும் இரு பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இவ்வெற்றிடங்கள் யாவும் அவசர அதிரடி இடமாற்றத்தின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, நியமன நியதிகளோ, இடமாற்ற விதிகளோ முறையாகப் பின்பற்றப்படவில்லை.

இதனால், இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் இடமாற்றத்திற்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளதோடு மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முறையீடு செய்து இடமாற்றத்தை இரத்துச் செய்து நிவாரணம் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, முறையாக விண்ணப்பங்களைக் கோரி, தகுதியானவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்து, நியமனம் வழங்கி அவசர அதிரடி இடமாற்ற சர்ச்சைக்கு தீர்வுகாணுமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X