2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சுகாதார சிற்றூழியர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டது

Princiya Dixci   / 2015 ஜூலை 13 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடந்த 10 மற்றும் 12 வருடங்களாக சுகாதாரத் தொண்டர்களாகவும் சிற்றூழியர்களாகவும் பணியாற்றிவருவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை (13) நடத்தவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார சிற்றூழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

நேற்று வேட்பு மனுத்தாக்கல் இறுதித் தினமாக இருந்தமையால் தமது கவனயீர்ப்பு போராட்டம் அரசியல்வாதிகளின் கவனத்தில் எடுபடாது என்பதாலேயே தாம் இதனைப் பிற்போட்டதாக அவரகள் மேலும் தெரிவித்தனர். 

அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டிய தொடக்கம் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் வைத்தியசாலைகளில் சுமார் 140 சுகாதார சிற்றூழியர்கள் கடந்த பத்து, பன்னிரெண்டு வருடங்களாக தாம் கொடுப்பனவின்றி தொண்டர்களாகப் பணியாற்றுவதாக தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X